நாகப்பட்டினம், ஜூலை 7: மொஹரம் பண்டிகை இஸ்லாமியர்களின் இரண்டாவது புனித நாளாக கருதப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள முஸ்லீம் மக்களால், ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இதனையொட்டி புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் உள்ள யாஹூசைன் பள்ளிவாசலில் மொஹரம் பண்டிகை நேற்று அனுசரிக்கப்பட்டது.
நாகூர் தர்கா தலைமை அறங்காவலர் செய்யது முகமது காஜி ஹுசைன் சாஹிப் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் தர்கா பரம்பரை கலிபா சிறப்பு துவா ஓதினார்.
அப்போது ஹுசைன் இப்னு அலி தியாகத்தை குறிக்கும் வகையில் இஸ்லாமியர்கள் அரபு மொழியில் துக்க பாடல்கள் பாடி வழிபாட்டில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து தப்ரூக் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தர்கா போர்டு ஆப் டிரஸ்டிகள் செய்திருந்தனர்.