நாகர்கோவில், நவ.10: நாகர்கோவில் மாநகர வடக்கு மண்டல அதிமுக செயலாளர் லிஜா சார்பில், வடக்கு மண்டல அதிமுக நிர்வாகிகளுக்கு தீபாவளி பண்டிகையொட்டி நலஉதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புத்தேரி பராசக்தி கார்டனில் நடந்தது. வடக்கு பகுதி அதிமுக செயலாளர் லிஜா தலைமை வகித்தார். நலத்திட்ட உதவிகளை அதிமுக மூத்த நிர்வாகி கிருஷ்ணதாஸ், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் இளைஞர் பாசறை செயலாளர் அட்சயா கண்ணன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் சந்திரன், பகுதி செயலாளர்கள் முருகேஷ்வரன், ஜெவின் விசு, முன்னாள் ஒன்றிய செயலாளர் கே.சி.யு.மணி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சுமார் 200 பேருக்கு உதவிகள் வழங்கப்பட்டன.