நாகர்கோவில், அக்.16: நாகர்கோவில் அருகே உள்ள தெங்கம்புதூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (38). பிளம்பர். இவரது மனைவி சுதா (33). சங்கருக்கு, மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. தினமும் மது குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்வார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு அதிகரித்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று குடிபோதையில் வந்த சங்கர், மனைவியிடம் தகராறு செய்து விட்டு வெளியே சென்றார். பின்னர் திடீரென தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டு நான் சாக போகிறேன்.
என்னை தேட வேண்டாம் என கூறி விட்டு போனை துண்டித்து விட்டார். இதனால் பயந்து போன சுதா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை தேடினார். அப்போது அங்குள்ள ஒரு தோப்பில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சங்கர் இறந்து கிடந்தார். இது குறித்து சுசீந்திரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.