நாகர்கோவில், ஆக.2: நாகர்கோவில் மாநகராட்சி 40-வது வார்டுக்குட்பட்ட இளங்கடை சாஸ்தான்கோயில் அருகே உள்ள காமராஜர் தெருவில் ₹7.50 லட்சம் செலவில் காங்கிரீட் சாலை மற்றும் கழிவுநீர் உறிஞ்சி குழி ஆகியவை அமைக்கும் பணியை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். அப்போது அங்கு ஓடையில் கழிவுநீர் தேங்கி கிடந்ததை பார்த்து மேயர் அதிர்ச்சியடைந்தார். சாலைகள் அமைக்கும் போது கழிவுநீர் ஓடைகளை சரி செய்து விட்டு சாலைகளை அமைக்க வேண்டும். இதனை கருத்தில் கொண்டு அதிகாரிகள் செயல்பட வேண்டும். என்று கூறினார். மேயருடன் மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி, உதவிப் பொறியாளர் சுஜின், தொழில்நுட்ப அலுவலர் அனந்த பத்மநாபன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாகர்கோவிலில் ₹7.50 செலவில் காங்கிரீட் சாலை பணியை மேயர் தொடங்கி வைத்தார்
56