நாகர்கோவில், ஆக.28: நாகர்கோவிலில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பங்களாதேஷில் பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு நீதி கேட்டு இந்து முன்னணி சார்பில் நாகர்கோவிலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. வேப்பமூடு சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகரத் தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். தோவாளை ஒன்றிய தலைவர் நாராயணராஜ், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தலைவர் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் அரசுராஜா, மாவட்ட செயலாளர் ஜான்கென்னடி, விஎச்பி மாநில செயலாளர் காளியப்பன், மாநகர தலைவர் நாஞ்சில் ராஜா, அமர்நாத் சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
நாகர்கோவிலில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
previous post