நாகப்பட்டினம், ஜூன் 4: நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆகாஷ் தலைமை வகித்தார். வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 256 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை,
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியம் மூலம் தற்காலிக தூய்மை பணியாளர்களாக பணிபுரியும் 5 பணியாளர்களின் குழந்தைகளுக்கு ரூ.20 ஆயிரம் திருமண உதவித்தொகை, 10 நபர்களுக்கு 15 ஆயிரம் கல்வி ஊக்கத்தொகை, 8 நபர்களுக்கு ரூ.8 ஆயிரம் கல்வி ஊக்கத்தொகை என மொத்தம் 23 நபர்களுக்கு ரூ.48 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆகாஷ் வழங்கினார். டிஆர்ஒ பவணந்தி, தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கார்த்திகேயன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.