நாகப்பட்டினம்,செப்.14: தேசிய மாணவர் படை சார்பில் நாகப்பட்டினம் அருகே ஒரத்தூர் சிதம்பரனார் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சிவா தலைமை வகித்தார். தேசிய மாணவர் படை பொறுப்பாளர் லதா மாணவர்களை வழி நடத்தினார். நெகிழி ஒழிப்புக்கு தீர்வு காண்பதற்கு வணிகர்கள், வாடிக்கையாளர்கள், அரசு ஆகிய மூன்று தரப்பும் என்ன செய்ய வேண்டும்? என்பதை குறுநாடகமாக நடத்தி காட்டி தனியார் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அதன் பிறகு நடந்த கவியரங்கத்தில் நெகிழியின் பயன்பாடு மற்றும் அதை குறைப்பதில் உள்ள சிரமங்கள் குறித்து கவிதையாக மாணவிகள் வாசித்தனர். இறுதியாக நெகிழி ஒழிப்பில் நாம் ஒவ்வொருவரும் மன உறுதியுடன் செயல்பட வேண்டும் என்பதற்காக கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் ஒன்றிணைந்து நெகிழி ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பள்ளி தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் பாலசண்முகம் நன்றி கூறினார்.