நாகப்பட்டினம்,ஏப்.5: பங்குனி உத்திர பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு நாகப்பட்டினம் அபீதகுஜாம்பாள் உடனுறை அமரநந்தீஸ்வரர் கோயில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். நாகப்பட்டினத்தில் அபீதகுஜாம்பாள் உடனுறை அமரநந்தீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா நடைபெறும். இதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 24ம் தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து 27ம் தேதி காலை கொடியேற்றப்பட்டது. இரவு சூரியபிரபையில் சுவாமி திருவீதியுலா நடந்தது. 28ம் தேதி இரவு சந்திரபிரபையில் சுவாமி திருவீதியுலா நடந்தது.
29ம் தேதி இரவு யானை வாகனத்திலும், 30ம் தேதி இரவு சிம்ம வாகனத்திலும் சுவாமி திருவீதியுலா நடந்தது. 31ம் தேதி மமாலை வசந்தன் உற்சவம் நடந்தது. இரவு குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதியுலா நடந்தது. 1ம் தேதி மாலை திருக்கல்யாணம் நடந்தது. இரவு பூதவானத்தில் சுவாமி திருவீதியுலா நடந்தது. 2ம் தேதி இரவு ஓலைசப்பரத்தில் சுவாமி திருவீதியுலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் நேற்று(4ம் தேதி) காலை நடந்தது. நகர்மன்ற தலைவர் மாரிமுத்து தேரை வடம் பிடித்து இழுந்து தொடங்கி வைத்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று(5ம் தேதி) காலை புண்டரீக குளம் மேல்கரையில் தீர்த்தவாரியும், இரவு இந்திரன் காட்சியும் நடைபெறுகிறது.
நாளை(6ம் தேதி) ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவுபெறகிறது. தென் மாவட்டங்களில் இருந்து வோங்கண்ணி அல்லது காரைக்கால் நேரடியாக செல்ல ரயில் வசதி இல்லை. அவ்வாறு இயக்கினால் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மட்டும் இன்றி திருச்சி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் எளிதாக தென்மாவட்டங்களான திருநெல்வேலி, நாகர்கோயில் ஆகியவற்றுடன் இணையும்.