நாகப்பட்டினம், ஜூலை 17: நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை நடந்து வருகிறது என கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், திருக்குவளை, செம்போடை ஆகிய அரசு ஐடிஐகளில் நேரடி சேர்க்கை நடந்து வருகிறது.
8ம் வகுப்பு தேர்ச்சி, 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10-ம் வகுப்பிற்கு மேல் தேர்ச்சி பெற்ற, தோல்வியுற்ற மாணவ மற்றும் மாணவிகள் மாவட்டத்தில் உள்ள அரசு ஐடிஐகளில் சேர அந்தந்த ஐடிஐகளுக்கு நேரில் சென்று சேர்க்கை உறுதி செய்து கொள்ள வேண்டும். கூடுதல் தகவல் பெற 04365-250129, 04369-276060 அல்லது 9487160168 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.