நாகப்பட்டினம்,ஆக.6: தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் நாகப்பட்டினம் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெயராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு பென்சன் ரூ.6 ஆயிரத்து 750 வழங்க வேண்டும். மருத்துவப்படி, மருத்துவ காப்பீடு ஆகியவற்றை வழங்க வேண்டும். அகவிலைப்படி, ஈமக்கிரியை நிதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.