எப்படிச் செய்வது?கொண்டைக்கடலை, சோயா இரண்டையும் 8 மணி நேரம் ஊறவைக்கவும். சிவப்பரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து, வெந்தயம், பருப்பு; வகைகளை ஒன்றாக சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும். நன்கு ஊறியதும் கிரைண்டரில் போட்டு அதனுடன் காய்ந்தமிளகாய் சேர்த்து; நைசான பதத்திற்கு அரைத்து கொள்ளவும். பின்பு மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி கலந்து அரைமணி நேரம் புளிக்க விடவும்.; பின்பு உப்பு போட்டு குழிப்பணியாரக் கல்லை சூடாக்கி எண்ணெய் விட்டு மாவை ஊற்றி வெந்ததும் எடுத்து மிளகாய், பூண்டு சட்னியுடன்; பரிமாறவும்.குறிப்பு: உடனேயே புளிக்க வைக்க தயிர் சேர்க்கலாம்.
நவதானிய பணியாரம்
previous post