நன்றி குங்குமம் டாக்டர்தோலில் அரிப்பு ஏற்பட்டாலோ, தழும்பு ஏற்பட்டாலோ, நிற மாற்றம் ஏற்பட்டாலோ ரத்தம் கெட்டுவிட்டது என்றுதான் பெரும்பாலும் நினைத்துக் கொள்வோம். உண்மையில் ரத்தம் கெடுமா? அவ்வாறு கெட்டால் அதற்கான காரணம் என்ன? ரத்தம் கெட்டுவிட்டால் என்ன அறிகுறிகள் தோன்றும்? அப்படியானால் சுத்தமான ரத்தத்தின் அறிகுறிகள் எப்படி இருக்கும்? ரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள என்ன செய்யலாம்? என்கிற கேள்விகளுக்கு விடையளிக்கிறார் ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன். ரத்தம் என்பது பிராண வாயுவிற்கு இணையானது. உயிர் வாழ்வதற்கு பிராண வாயு எவ்வளவு முக்கியமோ அதேபோல உயிரை நிலைநிறுத்துவதற்கு ரத்தம் மிகவும் முக்கியம். வாதம், பித்தம், கபம் ஆகிய இம்மூன்றும் பொதுவாக உடல் செயல் இயக்கங்களுக்கு மிக முக்கிய காரணமாக இருக்கக் கூடியவை. ஆனால், உயிரை நிலைநிறுத்த உதவும் ரத்தத்தை சுஷ்ருதர் என்ற மகரிஷி நான்காவது தோஷம் என்று கருதுகிறார். இவர் ஓர் அறுவை சிகிச்சை மருத்துவர். இவரே அறுவை சிகிச்சை துறையின் தந்தையும்கூட. இன்று அறுவை சிகிச்சை செய்யும் முன் ரத்த வங்கியில் ரத்தம் தயாராக இருக்கிறதா என்பதை உறுதி செய்த பின்பு அறுவை சிகிச்சை மேற்கொள்கின்றனர். அறுவை சிகிச்சையின்போது ரத்தம் மிக முக்கியமானது என்பதை 2 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே கூறிவிட்டார் சுஷ்ருதர். மேலும் அவர் ரத்தத்தை பேணிக் காப்பது எப்படி என்பதையும் கூறியிருக்கிறார்.கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றிலிருந்து ரத்தம் தோன்றுவதாக ஆயுர்வேதம் கூறுகிறது. ரத்தத்தின் மற்றொரு சிறப்பு இதில் நிலம், நீர், நெருப்பு, வாயு, ஆகாயம் போன்ற ஐம்பூதங்களின் குணாதிசயங்களும் அடங்கியுள்ளன. சுத்த ரத்தத்தின் அறிகுறிகள்ரத்தத்தின் நிறம் மின்மினிப்பூச்சியின் நிறத்தைப் போலவும், குன்றி மணி விதையி–்ன் சிவப்புப் பகுதி நிறத்தைப் போலவும் இருக்கும். இதையே தூய்மையான காற்றால் ஆக்சிஜனேற்றம் பெற்ற ரத்தத்தின் நிறமாகக் கருதலாம். சுத்த ரத்தம் உள்ளவரின் அறிகுறிகள்உடலிலும் முகத்திலும் ஒரு கவரக்கூடிய ஒளி, ஐம்புலன்களும் நன்றாக தெளிவாக செயல்படுதல், நன்றாக பசித்தல், மலம், சிறுநீர் கழித்தல் போன்றவை சீராக நடைபெறுதல், மகிழ்ச்சியான மனநிலை ஊட்டம், வளமை, நல்ல முறையில் சிந்தித்து சரியான முடிவை எடுத்தல் போன்ற அறிகுறிகளை இவர்கள் கொண்டிருப்பார்கள். வெண்மை நிறத்தில் இருந்தால்தான் அழகாக இருப்பார்கள் என்று தவறான கருத்து இருக்கிறது. ஆனால், ஆயுர்வேதம் கலையாக இருந்தாலே போதும் கலராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை மேற்கண்ட கருத்து மூலம் தெளிவுபடுத்துகின்றன. அசுத்த ரத்தத்தின் அறிகுறிகள்வாதம் என்ற தோஷத்தால், ரத்தம் கருஞ்சிவப்பு நிறத்திலும் எளிதில் மிக விரைவாக ஓடக்கூடியதாகவும் இருக்கும். இதனை ரத்த தட்டுக்கள் குறைந்த ரத்தத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். பித்தம் என்ற தோஷத்தால் ரத்தம் கேடு அடைந்தால் மஞ்சள் கலந்த சிவப்பு நிறத்துடனும் அல்லது காவி மண் நிறத்திலும் அதிக துர்நாற்றத்துடன் காணப்படும்.இந்த ரத்தம் அதிக சூடாக இருப்பதோடு, நீண்ட நேரம் சென்ற பின்பு உறையும். கபம் என்ற தோஷத்தால் கேடு அடைந்த ரத்தம் சிறிது வெளுத்து குழகுழப்பாய் இருக்கும். வெகு விரைவில் உறையும். இதனை கொழுப்பு மிகுந்த ரத்தத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். அதாவது கொழுப்பே கபம் என்பது ஆயுர்வேத மருத்துவ துறையின் கருத்தாக உள்ளது. அசுத்த ரத்தத்தால் மனிதர்களுக்கு உண்டாகும் நோய்கள்ரத்தப்போக்கு நோய், தோல் நோய், அக்கி, சீழ்கட்டி, சரவாங்கி எனும் மூட்டுவாதம், உடல்பாரம், ரத்தக்குழாயில் அடைப்பு, அசதி, அதிகமான கோபம், மயக்கம், வாய் உப்புக் கரிப்புடன் இருத்தல், அதிக வியர்வை துர்நாற்றம், சுறுசுறுப்பின்மை, அதிக தூக்கம், நடுக்கம், சொறி சிரங்கு, உடலில் எரிச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றும். அரிப்பும் நிறமாற்றமும் மட்டுமே ரத்த கெடுதியின் அறிகுறிகள் அல்ல; அதிக கோபம், மயக்கம் போன்றவையும் ரத்தக் கெட்டுப்போய்விட்டதன் அறிகுறிகளே!ரத்தம் கெடுதி அடைவதற்கான காரணங்கள்அதிக மதுபானம் உட்கொள்ளுதல் மற்றும் புளிப்பு, உப்பு, கார்ப்பு போன்றவற்றை அதிகளவு உட்கொள்ளுதல்,;; எண்ணெய்யில் பொரித்த உணவுகளை அதிகளவு உட்கொள்ளுதல், நீர் நிலைகளில் வாழும் மாமிசங்களை அதிகளவில் உட்கொள்ளுதல், மீன், தயிர் மற்றும் கீரை, தயிர் போன்றவற்றை இரவில் உட்கொள்ளுதல், பகல் தூக்கம், சீரணமாகாதபோது உணவு உண்ணுதல், வாந்தி வரும்போது தடுத்து நிறுத்தல் போன்ற இவையாவும் ரத்தம் கெடுதி அடைவதற்கு வழிவகுக்கிறது. ரத்தம் கெட்டுவிட்டால் அதற்கு தீர்வு என்ன?வாசம் என்ற விரத சிகிச்சை, சரியாக மலம் கழிக்கச் செய்தல், உணவுகளை முறையாக எடுத்துக் கொள்ளுதல், ரத்த மோட்சணம் என்ற ஆயுர்வேத சிகிச்சை போன்றவை ரத்தக் கெடுதிக்கு தீர்வு காண உதவும். கருங்காலிதான் ரத்தத்தை சுத்தம் செய்யக்கூடியவைகளில் மிகச் சிறந்த மூலிகை மருந்து. இந்தக் கட்டையை தண்ணீரில் கொதிக்க வைத்து தண்ணீர் தாகம் எடுக்கும்போது பருகி வர ரத்தம் சுத்தமடையும். அதிக கோபம் போன்ற மனது சம்பந்தப்பட்ட அறிகுறிகள் தோன்றினால் பிராணாயாமம் மற்றும் யோகாசனம் போன்றவைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் ரத்தம் சுத்திகரிக்க, அது கெடுவதற்கு உண்டான காரண காரியங்ளை முழுவதுவாக கர்த்தரிக்க வேண்டும்.– க.கதிரவன்
நல்ல ரத்தம்…கெட்ட ரத்தம்…
133
previous post