திருப்பூர், ஆக. 29: திருப்பூர் வடக்கு மாவட்டம் தெற்கு மாநகரம் நல்லூர் பகுதி பொது உறுப்பினர்கள் கூட்டம் ராக்கியாபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு செல்வராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். அப்போது சட்டமன்ற தேர்தல் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.
இதுபோல், நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார். இதில், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு. நாகராசன் மற்றும் பகுதி செயலாளர் மேங்கோ பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.