ஆவடி, பிப். 22: சென்னை அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகம் அமைந்துள்ளது. தென்மண்டல அதிகாரி அரவிந்தன் தலைமையில் அதிகாரிகள் தமிழக – ஆந்திர எல்லை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் நடமாட்டம் குறித்து தீவிரமாக சோதனை மேற்கொண்டு வந்தனர். அதன்படி, கடத்த 12ம் தேதி மதுரையில் 273 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதனை கடத்திய நபர்கள் தப்பிவிட்டனர். அதேபோல் கடந்த 13ம் தேதி மதுரை உசிலம்பட்டியில் 156 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இதுபோல, கடந்த 15ம் தேதி 16.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக 17ம் தேதி செங்குன்றம் அடுத்த நல்லூர் சுங்கச்சாவடி பகுதியில் ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் இருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சாவை கடத்தி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். பிறகு அவர்கள் அனைவரும் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
நல்லூர் சுங்கச்சாவடியில் லாரியில் கடத்தி வந்த 300 கிலோ கஞ்சா பறிமுதல்
0