திருப்பூர்: நல்லூர் அருகே உள்ள பல்லக்காட்டுப்புதூரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது வீட்டில் வைத்திருந்த 3.5 பவுன் நகை கடந்த சில நாட்களுக்கு திருட்டு போனது. இது குறித்து சக்திவேல் நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அப்போது சக்திவேல் வீட்டில் நகையை திருடியது அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த மீனா (24) என்பது தெரியவந்தது. பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வரும் மீனா, சக்திவேல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீடு புகுந்து நகையை திருடியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மீனாவை போலீசார் கைது செய்து நகையை மீட்டனர்.