வேலாயுதம்பாளையம், ஆக. 22: கரூர் மாவட்டம், காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் \”நல்லிணக்க நாள் உறுதிமொழி\” எடுக்கப்பட்டது.
நமது நாட்டில் பெருகிவரும் சாதி, மதம் மற்றும் மொழி பாகுபாடுகளை எதிர்க்கும் வகையிலும், வன்முறையில் ஈடுபடாமல், மக்களின் உணர்வு பூர்வ ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் பாடுபடவேண்டி தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள நிர்வாக அலுவலக கட்டிடத்தில் உறுதிமொழி ஏற்பு கூட்டம் நடைபெற்றது.
அனைத்து மக்களும் வேறுபாடுகளை வன்முறையில் ஈடுபடாமல், பேச்சு வார்த்தைகள் மூலமாகவும், அரசியலமைப்புச் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக்கொள் வோம் என்றும் உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் மனித வளம் முதன்மை மேலாளர் கேஎஸ். சிவக்குமார், முதுநிலை மேலாளர் ஜே.வெங்கடேசன், கணக்குப் பிரிவு முதுநிலை மேலாளர் பி எஸ் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டு நல்லிணக்க நாள் உறுதிமொழியை எடுத்து கொண்டனர்.