மயிலாடுதுறை, ஜூன் 6: நல்லத்துக்குடி குயிலாண்ட நாயகி அம்மை உடனுறை ஆலந்துறையப்பர் கோயில் மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. மயிலாடுதுறை அடுத்த நல்லத்துக்குடி கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமையான குயிலாண்ட நாயகி அம்மை உடனுறை ஆலந்துறையப்பர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.
கடந்த வைகாசி 19ம் தேதி பூர்வாங்க பூஜைகள் தொடங்கப்பட்டு நான்கு கால யாக பூஜைகள் நிறைவடைந்து, மகா பூர்ணாஹூதி தீபாராதனை உடன் பூஜிக்கப்பட்ட கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு மேளதாள வாத்தியங்கள் முழங்க கோயிலை சுற்றி வலம் வந்து, வேத மந்திரங்கள் முழங்க மங்கல வாத்தியங்கள் இசைக்க, கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருவாவடுதுறை ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள் பங்கேற்றார். மேலும் கும்பாபிஷேக விழாவில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.