பாப்பிரெட்டிப்பட்டி, ஜூன்25: பாப்பிரெட்டிப்பட்டி அருகே பூதநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட ஆலாபுரம் நலவாழ்வு மையத்திற்கு, தேசிய தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கான மருத்துவ சேவை மற்றும் தேசிய நல திட்ட செயல்பாடுகள், தொற்றுநோய்கள் மற்றும் தொற்றா நோய்கள் தடுப்பு பணிகள், தாய் சேய் நலத்திட்ட செயல்பாடுகள் தரவுகளின் அடிப்படையில், தேசிய தரச்சான்று பரிசீலனைக்குழு மருத்துவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். வட்டார மருத்துவ அலுவலர் கெளரிசங்கர் தலைமையில், மருத்துவ அலுவலர் அகிலன் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு, மாவட்ட சுகாதார அலுவலர் சுகாதார பணிகள் பூபேஸ் வாழ்த்து தெரிவித்தார்.
நலவாழ்வு மையத்திற்கு தேசிய தரச்சான்று
0