கூடுவாஞ்சேரி: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் காந்தி காலனி பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் வேதவல்லி (22). இவர், ஊரப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், நர்சாக பணிபுரிந்து வந்தார். இதில் கீழ் தளம் மருத்துவமனையாகவும் மேல்தளத்தில் இவருடன் அவரது தங்கையும் தங்கி பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று வேதவள்ளி தங்கி இருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீசார் விரைந்து வந்தனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த தனது காதலன் வேதவல்லியை ஏமாற்றியதால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.