ஸ்பிக்நகர், நவ. 2: தூத்துக்குடி அடுத்த முத்தையாபுரம் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் மாயாண்டி மகள் மகேஸ்வரி (21). இவர், பிஎஸ்சி நர்சிங் 3ம் ஆண்டு முடித்துள்ள நிலையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்தார். இவரது தாய் கற்பகம், திருச்செந்தூர் மின்வாரியத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மகேஸ்வரியின் அறைக்கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த பாட்டி பாப்பா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து திறந்து பார்த்த போது மகேஸ்வரி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து முத்தையாபுரம் போலீசார், மகேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.