தர்மபுரி, செப்.5: நல்லம்பள்ளி லளிகம் கிராமத்தை சேர்ந்தவர் மகேஸ்வரி (37). இவரது மகள் ஜீவிதா(18), நல்லம்பள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு நர்சிங் படித்து வருகிறார். நேற்று முன்தினம், கல்லூரிக்கு சென்ற ஜீவிதா மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், இதுபற்றி மகேஸ்வரி அளித்த புகாரின் பேரில், அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். அரூர் அருகே கெளாப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர்(49). இவரது 2வது மகள் ஜீவிதா(20), தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து விட்டு, பல் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். கடந்த 2ம் தேதி வேலைக்கு சென்ற ஜீவிதா, மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்காததால், ஜெய்சங்கர் அளித்த புகாரின் பேரில், அரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.