தேனி, ஆக.14: கம்பம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் அரசபாண்டி. இவரது 17வயது மகள், தேனி-பெரியகுளம் சாலையில் உள்ள ஒரு மருத்துவமனை விடுதியில் தங்கி நர்சிங் 2ம் ஆண்டு பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறிச் சென்ற மாணவி மீண்டும் விடுதிக்கு வரவில்லை என மருத்துவமனை நிர்வாகம், தந்தைக்கு தகவல் தெரிவித்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.
சிறுமி மாயம்: தேனி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் கலைவாணி. இவருக்கு 17 மற்றும் 15 வயதில் இரு மகள்கள் உள்ளனர். இவரது 17வயது மகள் தேனியில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டிலிருந்த 17 வயது மகள் மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சிறுமியை தேடி வருகின்றனர்.