திருக்கோவிலூர், மே 21: திருக்கோவிலூர் அருகே நரிக்குறவர் இன மக்கள் நடத்திய கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளை எம்எல்ஏ துவக்கி வைத்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படியும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனையின் படியும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தி பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் பேரில் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாடாம்பூண்டி கூட்ரோடு பகுதியில் நரிக்குறவர் இன மக்கள் கிரிக்கெட் விளையாட்டு போட்டி நேற்று முதல் தொடங்கி நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. அதில் திருக்கோவிலூர், மாடாம்பூண்டி ,சின்னசேலம், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய பகுதிகளில் இருந்து 13 அணிகள் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்கிறது.
இதனை முன்னிட்டு கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் வசந்தம் கார்த்திகேயன் எம்எல்ஏ போட்டியினை தொடங்கி வைத்து கிரிக்கெட் விளையாடுவதற்காக உபகரணங்களையும் மற்றும் நிதியும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திருக்கோவிலூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் பூமாரி கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய துணைச் செயலாளர் வழக்கறிஞர் ரவிச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் சண்முகம், ஊராட்சி மன்ற தலைவர் சத்யா பொன்முடி, கிளைக் கழக செயலாளர் ரமேஷ் மற்றும் திமுக நிர்வாகிகள் கோபி, துரை, பொட்டு பொட்டு, கல்யாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.