தொண்டி, ஆக.3: தொண்டி அருகே உள்ள நம்புதாளை ஆற்றைச் சுத்தப்படுத்தும் பணி நடந்தது. தொண்டி அருகே நம்புதாளை கடற்கரை அருகே உள்ள ஆறு முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்து காணப்பட்டது.
இதை சரி செய்ய கோரி படத்துடன் நேற்று தினகரனில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நம்புதாளை ஊராட்சி சார்பில் ஆறு சுத்தம் செய்யப்பட்டு கரையில் இருந்த காட்டு கருவை அகற்றப்பட்டது. இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் பாண்டிச் செல்வி ஆறுமுகம் கூறுகையில், ஆற்றின் அருகில் வசிப்பவர்கள் ஆற்றில் குப்பையை கொட்டுவதால் கழிவுகள் சேருகிறது. அதனால் பொதுமக்கள் ஆற்றில் கழிவுகளை கொட்ட வேண்டாம் என்றார்.