தொண்டி, அக்.31: கடந்த நூறு வருடங்களுக்கு முன்பு நம்புதாளை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான காலரா நோயால் மக்கள் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டுள்ளனர். அப்போது இப்பகுதிக்கு வருகை தந்த மகான் பல்லாக்கு ஒலியுல்லா காலரா நோயை கட்டுப்படுத்த இறைவனை நோக்கி கவிதை படித்துள்ளார். நோயும் கட்டுக்குள் வந்துள்ளது. இதையடுத்து இங்கு வசிக்கும் அனைத்து குடும்பங்களும் குடிவரி செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டதற்கு இணங்க இன்றும் இப்பகுதி மக்கள் வரி செலுத்தி வருகின்றனர்.
அன்று பாடிய பாடலை இன்றும் வெள்ளிக் கிழமைகளில் பள்ளிவாசலில் பாடப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த தர்ஹாவின் 100ம் ஆண்டு கந்தூரி விழா கடந்த 27ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. நேற்று கந்தூரி விழாவை முன்னிட்டு தர்ஹா மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அனைத்து சமுதாய மக்களும் ஏராளமா
னோர் கலந்து கொண்டனர்.