நத்தம், ஆக. 7: நத்தம் அருகே பெரிய அறவங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கோசுகுறிச்சி, சேத்தூர், குட்டுப்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நேற்று நடந்தது. முன்னாள் எம்எல்ஏ ஆண்டி அம்பலம் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, பேரூர் செயலாளர் ராஜ்மோகன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) நாகராஜன் முன்னிலை வகித்தனர். மண்டல அலுவலர் மற்றும் மாவட்ட ஊராட்சி செயலர் வீரராகவன் வரவேற்றார்.
வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி முகாமை துவங்கி வைத்தார். இம்முகாமில் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மொத்தம் 854 மனுக்களை பெற்று கொண்டனர். இதில் தாசில்தார் சுகந்தி, ஒன்றிய ஆணையாளர் குமரவேல், வட்டாரவளர்ச்சி அலுவலர் (கி.ஊ) மகுடபதி, மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமாரசாமி, மாவட்ட பிரதிநிதி அழகர்சாமி, வடக்கு ஒன்றிய பொருளாளர் கலிபுல்லா, ஊராட்சி மன்ற தலைவர்கள் ஷாஜிதா பேகம், சுப்பிரமணியன், அழகம்மாள் மணி, முன்னாள் ஊராட்சி தலைவர் பாரூக் முகமது மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.