நத்தம், ஆக. 19: நத்தம் அருகே காசம்பட்டியை சேர்ந்த ஆண்டிச்சாமி மகன் அபிசேக் (15). கோயம்புத்தூரில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த ஒரு மாதமாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஊருக்கு விடுமுறைக்காக வந்திருந்த அபிசேக் நேற்று முன்தினம் வயிற்று வலி தாங்காமல் அலறி துடித்தவர் பின் திடீரென மயங்கி விழுந்து விட்டார். உடனே அவரது பெற்றோர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அபிசேக் உயிரிழந்து விட்டார். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நத்தம் அருகே பள்ளி மாணவர் திடீர் சாவு
previous post