நத்தம், செப்.4: நத்தம் அருகே தீ விபத்தில் குடிசை எரிந்து சாம்பலானது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நத்தம் அருகே மலைவிநாயகம்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன். இந்நிலையில் நேற்று, இவரது குடிசை வீடு திடீரென தீ பிடித்து எரிந்தது. இது குறித்து நத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கபட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) அம்சராஜன் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் குடிசை முழுவதும் எரிந்து சாம்பாலாகியது. மேலும் வீட்டில் இருந்த பீரோ, கட்டில், கிரைண்டர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் முழுவதும் தீயில் கருகின. இந்த தீ விபத்து, மின் கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.