நத்தம், ஜூலை 8: நத்தம் அருகேயுள்ள மணக்காட்டூரை சேர்ந்தவர் நல்லையா (55). இவர், மேற்குப்பட்டி மேகாடு பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் நேற்று முன்தினம் இரவு தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில், மணக்காட்டூருக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். வழியில் அவரை மறித்த காட்டு மாடு ஒன்று, முட்டி தூக்கி வீசியது. இதில் நல்லையா படுகாயமடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.