நத்தம், ஆக.21: நத்தம் அருகே சிறுகுடியில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக அப்பகுதியில் கல்குவாரி அமைவது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் குணசேகரன், தாசில்தார் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறுகுடி கிராமம் தேத்தாம்பட்டி பகுதியில் புதிதாக அமையவுள்ள வெள்ளைக்கல் குவாரி குறித்து அப்பகுதி பொதுமக்கள் விவசாயிகள், சமூக ஆர்வலர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது. அப்போது அதில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கருத்துக்களை அதிகாரிகள் முன் எடுத்துக் கூறினர். முடிவில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் நன்றி கூறினார்.