நத்தம், மே 29: நத்தம் அருகே ஆடு மேய்க்க சென்ற பெண் கிணற்றில் தவறி விழுந்து பலியானார்.நத்தம் காக்காபட்டியை சேர்ந்தவர் முருகேசன் மனைவி சின்னபொண்ணு (48). இவர் நேற்று முன்தினம் நத்தம்- கோவில்பட்டி கீழத்தெரு பகுதியில் உள்ள தோட்டத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது ஆடுகளின் தாகம் தீர்க்க, கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்றவர் தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், அவருடன் ஆடு மேய்க்க சென்றவர்கள் கிணற்று பகுதிக்கு சென்று பார்த்தபோது, அவர் தவறி விழுந்தது தெரிய வந்தது.
தகவலறிந்து வந்த நத்தம் தீயணைப்புத்துறையினர் பேரூராட்சி நிர்வாகத்தின் உதவியுடன் கிணற்றில் இறங்கி சுமார் 3 மணிநேரம் போராடி சின்னப்பொண்ணுவின் சடலத்தை மீட்டனர். பின்னர் அவர் உடல் பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து நத்தம் ேபாலீசில் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே 3 மாதங்களுக்கு முன் கணவர் இறந்த நிலையில், மனைவியும் இறந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.