நத்தம், ஆக. 31: நத்தம் பேரூராட்சி அலுவலகத்தில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் சேக்சிக்கந்தர் பாட்சா தலைமை தாங்கினர். துணை தலைவர் மகேஸ்வரி சரவணன் முன்னிலை வகித்தார். நிர்வாக அலுவலர் விஜயநாத் வரவேற்றார். தலைமை எழுத்தர் பிரசாத் அறிக்கை வாசித்தார்.
இக்கூட்டத்தில் நத்தம் பஸ் நிலையத்தில் உள்ள இருசக்கர வாகன நிறுத்தும் இடத்திற்கான ரூ.13 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் மேற்கூரை அமைக்கும் பணி, ரூ.20 லட்சம் மதிப்பில் மயானம் மேம்பாட்டு பணி செய்தல் உள்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். தூய்மை பணி ஆய்வாளர் செல்வி சித்ரா மேரி நன்றி கூறினார்.