நத்தம், ஜூன் 30: நத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து நத்தம் எஸ்ஐ கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். வத்திபட்டி அருகே புதுக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு பெட்டி கடையில் புகையிலை பொருட்கள் விற்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கடை உரிமையாளர் ராஜேந்திரன் (52) என்பவரை கைது செய்து, விற்பனைக்காக வைத்திருந்த 13 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.