நத்தம், மே 15 :நத்தம் பஜார் தெருவில் 10க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றி திரிகின்றன. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் சுற்றி திரிந்த தெருநாய் வெறி பிடித்து அவ்வழியாக சென்ற காஞ்சரம்பேட்டையை சேர்ந்த நவீன் (28). ஆவிச்சிபட்டியை சேர்ந்த டெய்லர் பெரியசாமி (45), முஸ்லிம் தெருவை சேர்ந்த சதாம் உசேன் (30) மற்றும் 4 சிறுவர்களை கடித்து குதறியது. இதில் காயமடைந்த 7 பேரும் சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் சுற்றி திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நத்தத்தில் தெருநாய் கடித்து 7 பேர் காயம்
0