மதுரை, பிப். 20: மதுரையில் நண்பருடன் ஏற்பட்ட திடீர் மோதல் எதிரொலியாக, அவரது டூவீலரை பெட்ரோல் ஊற்றி எரிந்த 3 வாலிபர்களை போலீசார் கைது ெசய்தனர். மதுரை, அண்ணாநகரை சேர்ந்தவர் பாலமுருகன்(20). இவரது நண்பர் திடீர்நகரை சேர்ந்த காட்வின்(29), இவர் கேரளாவில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சொந்த ஊருக்கு வரும் போதலெ்லாம் பாலமுருகன், காட்வின் மற்றும் சதீஷ்குமார்(21) ஆகியோர் ஒன்றாக சேர்ந்து அடிக்கடி மது அருந்துவது வழக்கமாக இருந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று சொந்த ஊருக்கு வந்த காட்வின், அவர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது செல்போன் ரிப்பேர் செய்வதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட மோதலால் ஆத்திரமடைந்து பாலமுருகனின் டூவீலரை பெட்ரோல் ஊற்றி எரிந்துள்ளனர். இது குறித்து அண்ணாநகர் போலீசில் அவர் புகார் அளித்தார். இதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி காட்வின், சதீஷ்குமார் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.