தூத்துக்குடி, அக். 28: தூத்துக்குடி காந்திநகரைச் சேர்ந்தவர் இசக்கிராஜா(24). ராஜிவ் நகரைச் சேர்ந்தவர் விக்கி(24). இவர்கள் இருவரும் நண்பர்கள். விக்கி சென்னையில் ஒரு கடையில் வேலை செய்து வருகிறார். தசரா திருவிழாவுக்காக தூத்துக்குடிக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் இருவரும் மது குடித்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாய் தகராறின்போது, விக்கி இசக்கிராஜாவின் தலையில் கல்லை போட்டு தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த இசக்கிராஜா, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தூத்துக்குடி சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து விக்கியை கைது செய்தனர்.