திருப்பூர், ஆக.22: திருப்பூர் மாநகராட்சி அலுவலக சந்திப்பு சாலை முக்கிய போக்குவரத்து பகுதியாக உள்ளது. புது மார்க்கெட் வீதி, மங்களம் சாலை, பேருந்து நிலையம் ஆகியவற்றிற்கு செல்வதற்கான பகுதி என முக்கிய சந்திப்பு பகுதியாக உள்ளது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. மேலும், ஏராளமான வணிக நிறுவனங்களும் இப்பகுதியில் அமைந்துள்ளது.
வணிக நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு செல்லக்கூடிய பொதுமக்கள் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் இப்போதையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையிலும், நடந்து செல்பவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் நடைபாதை அமைக்கும் பணி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து மங்களம் சாலை சந்திப்பு வரை நடைபாதை அமைக்கப்பட்டு டைல்ஸ் கற்கள் மற்றும் கம்பி வேலி அமைக்கும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.