தேனி, ஜூன் 7: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடப்போம், நலம் பெறுவோம் என்ற தலைப்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், நடப்பதால் ஏற்படும் நன்மைகள், உடலி்ல் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் நவீன காலத்தின் நடைபயிற்சியின் அவசியம் குறித்து விளக்கப்பட்டது.
இதற்காக மாவட்டத்தில் 8 கிமீ தூரம் கொண்ட நடைபாதைகள் கண்டறியப்பட்டு ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறன்று நல்வாழ்வு பேணுவதற்கான நடைபயிற்சியினை ஊக்குவிக்கும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், அரசுஅலுவலர்கள் இணைந்து நடைபயிற்சியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் போஸ்கோராஜா, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ராஜராம், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அண்ணாத்துரை, வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வக்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.