காரைக்கால், ஜூலை 5: நடுஒடுதுறை பகுதியில் ரூ.17 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றியை நாஜிம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
காரைக்கால் மாவட்டம் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட நடுஒடுதுறை பகுதியில் நிலவி வரும் மின் பற்றாக்குறையை சரி செய்யும் நோக்கில் ரூ.17.35 லட்சம் திட்ட மதிப்பீட்டில் 315 கேவி திறன் கொண்ட புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. அந்த மின்மாற்றியை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் தொடங்கி வைத்தார். இதன் மூலம் நடுஒடுதுறை கிராம் மற்றும் உடையான்திடல், சியாமளா கார்டன், விஐபி நகர், நடுஒடுதுறை பிள்ளையார் கோவில் தெரு ஆகிய பகுதிகள் பயன்பெறும். இந்த நிகழ்வில் மின்துறை செயற்பொறியாளர் அனுராதா, உதவி பொறியாளர் சிவகுமார், இளைநிலை பொறியாளர் முருகானந்தம், மின்துறை ஊழியர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.