தா.பழூர்:அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள வாழைக்குறிச்சி கிராமத்தில் மணல் குவாரி இயங்கி வந்தது. இந்த குவாரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மணல் குவாரியில் அமலாக்கதுறை ரெய்டு நடந்தது. இதையடுத்து வாகனங்கள் எடுத்து செல்லப்பட்ட நிலையில் மணல் குவாரி மூடப்பட்டது. இதனால் மணல் ஏற்றி செல்வதும் நிறுத்தப்பட்டது. தற்பொழுது மீண்டும் நேற்று காலை அரசு சார்பில் மணல் குவாரி இயங்குவதாக கூறி 3 லாரியில் மணல் ஏற்றி சென்றுள்ளனர். இதனையடுத்து வாழைக்குறிச்சி கிராம மக்கள் கொள்ளிடம் ஆற்றின் மணல் குவாரியில் இருந்து சென்ற லாரிகளை மறித்து சிறைப்பிடித்தனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தா.பழூர் காவல்துறையினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.