பரமத்திவேலூர், பிப்.16: பரமத்தி ஒன்றியத்திற்கு உட்பட்ட கருங்கல்பட்டியில் 130க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இப்பகுதி மக்கள் 3 கி.மீ. தொலைவில் உள்ள செருக்கலை புதுப்பாளையத்தில் உள்ள ரேஷன் கடைக்கு செல்ல வேண்டி இருந்ததால், சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் அப்பகுதி மக்கள் தங்களுக்கு தனி ரேஷன் கடை அல்லது நடமாடும் ரேஷன் கடை மூலம் தங்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையேற்று, நடமாடும் ரேஷன் கடையை நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் மதுராசெந்தில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பரமத்தி ஒன்றிய செயலாளர் தனராசு, மணிவண்ணன், கவிபிரியா, மாதேஸ்வரன், கிரிசங்கர், சத்தியராஜ், மணிவண்ணன், பொன்னுசாமி, சரவணன், பழனிவேல் கலந்து கொண்டனர்.
நடமாடும் ரேஷன் கடை தொடக்கம்
0
previous post