குளித்தலை, ஆக. 7: கரூர் மாவட்டம் வேளாண்மை துறையின் கீழ் ஆத்மா திட்டத்தில் நச்சலூர் கிராமத்தில் அங்கக இடுபொருட்கள் உற்பத்தி செய்தல் குறித்த பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சிக்கு குளித்தலை வட்டார வேளாண்மை துணை அலுவலர் கணேசன் தலைமை வகித்து வேளாண்மை துறையில் தற்போது கிடைக்கும் நெல் விதைகள் மானியத்துடன் கிடைக்கும் என்றும், மேலும் உயிர் உரங்கள் மானிய விலையில் கிடைக்கும் என்றும் விளக்கம் அளித்தார்.
புழுதேரி வேளாண் அறிவியல் மையத்தின் கவியரசு தொழில்நுட்ப வல்லுனர் பேசுகையில், அங்கக இடுபொருட்கள் பஞ்சகாவியா தேமோர் கரைசல் மீன் அமிலம் பூச்சி விரட்டி வேப்ப கோட்ட கரைசல் எவ்வாறு தயாரிப்பது என்பதை பற்றி செயல் விளக்கம் அளித்தார். உதவி வேளாண்மை அலுவலர் தனபால் பேசுகையில், தற்போது பிரதம மந்திரி கிசான் மற்றும் பயிர் காப்பீடு திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார். இதில் உதவி வேளாண்மை அலுவலர் அருண்குமார், செல்வராஜ் கலந்து கொண்டனர். பயிற்சியை திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வேந்திரன் நன்றி கூறினார். இப்ப பயிற்சியில் 80க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு அங்கக இடுபொருள்கள் உற்பத்தி குறித்து விளக்கம் கேட்டு பயனடைந்தனர்.