தர்மபுரி, ஆக.27: தொப்பூர் பப்புரெட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மனைவி தமிழ்செல்வி(28). இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 24ம் தேதி வீட்டில் இருந்து கடைக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற தமிழ்செல்வி மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தொப்பூர் போலீசில், சந்தோஷ் புகார் தெரிவித்துள்ளார். அதில், வீட்டிலிருந்த 50ஆயிரம் ரூபாய், ஒரு பவுன் தங்க சங்கிலி ஆகியவற்றை தமிழ்செல்வி எடுத்து சென்றுவிட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தரவேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நகை-பணத்துடன் இளம்பெண் மாயமான சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.