சேலம், நவ. 10: கோவை மாவட்டம், கோவில்பாளையம் சர்க்கார் ஜாமுக்குளம் பகுதியை சேர்ந்த தனபால் மனைவி சரோஜா (55). இவரிடம் சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் 15 பவுன் நகையை மர்மநபர்கள் திருடி சென்றனர். செவ்வாய்பேட்டை போலீசார் விசாரித்ததில் மதுரை மாவட்டம் மேலூர் சொக்கம்பட்டியை சேர்ந்த முத்துகுமார் (51), மேலூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த கார்த்தி (40), ஒத்தக்கடை உலகநேரியை சேர்ந்த சுந்தரபாண்டியன் (37), மேலூர் உலகநாதபுரத்தை சேர்ந்த வெங்கடேசன் (47), திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அசோக்நகரை சேர்ந்த சக்திவேல் (27) ஆகியோர் நகை திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து போலீசார் 5 பேரையும் கைது செய்து, நகைகளை மீட்டனர்.
நகை திருடிய கும்பல் கைது
previous post