பாலக்காடு, பிப்.28: கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் விய்யூரில் அமைந்துள்ள தங்க நகைக்கடையில் 5 கிலோ வௌ்ளி ஆபரணங்கள் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர். திருச்சூர் அருகே விய்யூரில் தங்க நகைக்கடை ஒன்றில் கடந்த ஜனவரி 11 ம் தேதி இரவு தமிழகத்தைச் சேர்ந்த இருவர் பூட்டை உடைத்து கடைக்குள் புகுந்து 5 கிலோ வெள்ளி ஆபரணங்களை திருடி தப்பித்தனர். கடை உரிமையாளர் விய்யூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விய்யூர் இன்ஸ்பெக்டர் மிதுன், எஸ்.ஐ நுக்மான் தலைமையில் காவலர் குழுவினர் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி..வி கேமராக்களை ஆய்வு மேற்கொண்டனர். விய்யூர் பகுதியில் தமிழகம் கிருஷ்ணகிரியை சேர்ந்த சந்தோஷ் என்பவர் கை வரிசை காட்டியது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து கேரளா போலீசார் தமிழகம் கிருஷ்ணகிரி மாவட்டம் வரட்டனப்பள்ளி அருகே பனந்தோப்பைச் சேர்ந்த வேலன் (32), சந்தோஷ் (23) ஆகிய இருவரை தமிழக போலீசார் உதவியுடன் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்