கோவை, அக்.6: கோவை மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் சுமார் 10 ஆயிரம் நகல் குடும்ப அட்டைகள் அச்சடிப்பட்டு விரைவு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் சுமார் 10 ஆயிரம் நகல் குடும்ப அட்டைகள் அச்சடிப்பட்டு விரைவு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே குடும்ப அட்டைதாரர்கள் தாங்கள் நேரடியாக www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் நகல் குடும்ப அட்டை என்பதை தேர்வு செய்து தாங்கள் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணை உள்ளீடு செய்து.
ஒரு முறை கடவுச்சொல்லை பயன்படுத்தி நகல் குடும்ப அட்டைக்கு விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பிக்கும் போதே அட்டைக்கான கட்டணம், அஞ்சல் வழி பெறுவதற்க்கான கட்டணத்தை நெட் பேங்கிங் அல்லது ஏதாவது ஒரு பணம் செலுத்தும் முறையில் செலுத்தலாம். மேலும் பணம் செலுத்தியதற்கான ஒப்புகை பக்கத்தினை பதிவிறக்கம் செய்தும் ஒப்பகை பக்கம் மற்றும் பணம்பரிவர்த்தனை சமர்பிக்கப்பட வேண்டும்.
அச்சடிக்கப்பட்ட நகல் குடும்ப அட்டையை இரண்டு வார காலத்தில் நேரடியாக விண்ணப்பதாரர்களின் முகவரிக்கே நேரடியாக விரைவு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். நகல் குடும்ப அட்டை அச்சிட்டு வழங்க எந்தவொரு தனியார் நிறுவனத்திற்கோ அல்லது தனி நபருக்கோ எவ்வித அனுமதியும் அரசால் வழங்கப்படவில்லை. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.