செங்கல்பட்டு, செப். 5: நகர திமுக செயலாளர் ஜெ.சண்முகம் இல்லத்திருமண விழாவில், இன்று கலந்து கொண்டு உதயநிதி ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைக்கிறார். இதில், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர். மறைமலைநகர் நகர திமுக செயலாளரும் மறைமலைநகர் நகரமன்ற தலைவருமான ஜெ.சண்முகம்-லோகேஸ்வரி ஆகியோரின் மகன் ச.கிஷோர் குமார்-பி.மோனிஷா ஆகியோரின் திருமணம் இன்று (5ம் தேதி) காலை 9 மணி அளவில் மறைமலைநகர் நகராட்சி விளையாட்டு திடலில் நடக்கிறது. இதனிடையே, நேற்று மாலை 6 மணி அளவில் மணமகன் மற்றும் மணப்பெண் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த விழாவிற்காக பிரமாண்ட விழா மேடை அமைக்கப்பட்டது. மேலும், விளையாட்டு திடலின் உள் மற்றும் வெளி பகுதிகளிலும் கண்ணை கவரும் வண்ணம் மின் விளக்குகள் எரிய விடப்பட்டது. இந்த திருமண விழாவில், தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நகராட்சி தலைவர்கள், மேயர்கள், நகராட்சி தலைவர்கள், உள்ளாட்சி பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதனை தொடர்ந்து, இன்று காலை 9 மணியளவில் நடைபெறும் திருமண விழாவில் தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சரும், மாநில இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ச.கிஷோர் குமார்-பி.மோனிஷா ஆகியோரின் திருமணத்தை நடத்தி வைக்கிறார்.
இதில், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், உயரதிகாரிகள், திமுக தலைமை நிலைய நிர்வாகிகள் என அனைத்து பிரமுகர்களும் கலந்து கொள்கின்றனர். மேலும், இந்த திருமண விழாவுக்கு, காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் தலைமையில் இந்த திருமண விழா நடைபெறுகிறது. காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் முன்னிலை வக்கின்றனர். இதற்காக, மறைமலை நகர் நகராட்சி விளையாட்டு திடலில் பிரமாண்டமாக திருமண விழா மேடை அமைக்கப்பட்டுள்ளது.
திருமணத்தில், துணை செயலாளர் து.மூர்த்தி, ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.கே.கமலக்கண்ணன், நகர நிர்வாகிகள் அரங்க கிரிச்சந்திரன், அசோகன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஆல்பர்ட், முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர் பரணி, கருணாநிதி, சுந்தர், பொறியாளர் அணி அமைப்பாளர் வினோத்குமார், முருகேசன், பார்த்தசாரதி, நகரமன்ற கவுன்சிலர்கள் மனோகரன், சுரேஷ்குமார், பெருமாள், சுசீலா சுப்பிரமணி, ரேணுகா குணசேகரன், கோமளவல்லி தட்சிணாமூர்த்தி, விஜயலட்சுமி நித்யானந்தம், காயத்ரி சரவணன், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள், மறைமறை நகர பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர்.