தாராபுரம், ஜூன் 3: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து நேற்று திறக்கப்பட்டன. இந்நிலையில், தாராபுரம் வளையல் கார தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற மாணவ மாணவிகளுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமை ஏற்றார். தொடர்ந்து அவர், மாணவ மாணவிகளுக்கு விலையில்லா பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள், காலணிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்து பேசினார். இந்நிகழ்ச்சிக்கு தாராபுரம் நகர சபை தலைவர் பாப்பு கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர், திமுக நகர கழக செயலாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், நகர்மன்ற உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியைகள், பொதுமக்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
நகராட்சி பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடைகள், காலணிகள் வழங்கல்
0
previous post