Saturday, February 24, 2024
Home » நகரமன்ற தலைவர் தகவல் தங்கமாய் ஜொலிக்கும் சம்பா பயிர் பிப்.1ல் சிறப்பு குறைதீர் கூட்டம் மாற்று திறனாளிகள் தொகுப்பு வீடு கட்ட மனு கொடுக்கலாம்

நகரமன்ற தலைவர் தகவல் தங்கமாய் ஜொலிக்கும் சம்பா பயிர் பிப்.1ல் சிறப்பு குறைதீர் கூட்டம் மாற்று திறனாளிகள் தொகுப்பு வீடு கட்ட மனு கொடுக்கலாம்

by Francis

 

திருவாரூர், ஜன. 26: திருவாரூர் கோட்ட அளவிலான மாற்றுதிறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 1ம் தேதி நடைபெறுவதாக கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து அவரவர்க்கு தேவையான நலத்திட்ட உதவி குறித்த கோரிக்கை மனுக்கள் பெற்று தகுதியான கோரிக்கைகளுக்கு தீர்வுகாணும் வகையில் திருவாரூர் மற்றும் மன்னார்குடி கோட்ட அளவிலான சிறப்பு குறைதீர் கூட்டமானது ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருவாரூர் கோட்ட அளவிலான கூட்டமானது வரும் 1ம் தேதி திருவாரூர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் காலை 11 மணியளவில் நடைபெறவுள்ள நிலையில் இதில் மாற்றுத்திறனாளிகள் தவறாமல் கலந்துகொண்டு அவர்களது கோரிக்கை மனுக்களை எழுத்து பூர்வமாக அளித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. அன்றையதினம், மாற்றுத்திறனாளிகளின் மனுக்கள் மீதான கோரிக்கைகளுக்கு ஏற்ப உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் மனுக்கள் வழங்கப்படும். வயது வரம்பு ஏதும் இல்லை.

18 வயதிற்குகீழ் உள்ளவர்களும் விண்ணப்பம் அளிக்கலாம். மனுதாரர்களின் கோரிக்கைகள் அனைத்தும் அரசின் விதிகளுக்குட்பட்டு பரிசீலிக்கப்படுவதோடு, குறைகளுக்கு தீர்வுகாணும் வகையில் உள்ள மனுக்களுக்கு உரிய உதவிகள் வழங்கிட தக்க நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும். மேலும் வீட்டு மனை பட்டா, ஏற்கனவே பட்டா இருப்பின் அரசின் தொகுப்பு வீடு மற்றும் 100 நாள் வேலை திட்டம் போன்றவை குறித்தும் விண்ணப்பம் அளிக்கலாம் என்பதுடன் இந்த முகாமிற்கு வருகையின் போது இருப்பிட முகவரிக்கான ஆதாரம், குடும்ப அட்டை நகல், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாளஅட்டை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் மற்றும் தற்போதைய புகைப்படம் ஆகியவற்றைத் தவறாது கொண்டுவரவேண்டும். இதற்குமுன்னர் விண்ணப்பம் அளித்திருந்து அதற்கானஆதாரம், தொடர்புடைய கடிதங்கள் ஏதுமிருப்பின், அதனையும் தவறாது கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

thirteen − four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi