ஆரல்வாய்மொழி, செப்.5: தோவாளையில் செக்கர்கிரி சுப்ரமணியசுவாமி கோயில் உள்ளது .இக்கோயில் கும்பாபிஷேக விழா வருகிற 6ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு 6ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை கணபதி ஹோமமும், விக்னேஸ்வரர் பூஜையும், பின்னர் கும்பத்தில் புனித நீர் எடுத்து வருதல் நிகழ்ச்சியும் தொடர்ந்து முதல் யாகசாலை பூஜையும் நடைபெறுகிறது. 7 ம் தேதி காலையில் 2ம் கால யாகசாலை பூஜையும் அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. 8ம் தேதி யாகசாலை பூஜையும் காலை 7.40 மணிக்கு விமான கும்பாபிஷேகமும் செக்கர்கிரி வேலவனுக்கு கும்பாபிஷேகம் மற்றும் அபிஷேகம் நடைபெறுகிறது. 11.30 மணிக்கு அன்னதானமும் இரவு 7:30 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாதரனையும் நடைபெறுகிறது. முன்னதாக 6ம்தேதி புதியதாக கட்டப்பட்டுள்ள தோரணவாயிலை முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் திறந்து வைக்கிறார். கும்பாபிஷேக தினத்தன்று நடைபெறும் அன்னதானத்தை தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைக்கிறார். ஏற்பாடுகளை செக்கர்கிரி சுப்பிரமணியசுவாமி கோயில் மகமை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.